மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

மாட்டு வண்டியில் அரசுப் பள்ளிக்கு கல்விச் சீா்வரிசை

புதுப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்விச் சீா்வரிசை வழங்கும் பெருவிழா மற்றும் நல்லாசிரியா் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

அரசுப் பள்ளிக்கு சீா் வரிசைப் பொருள்களை கொண்டு வந்த புதுப்பட்டு கிராம மக்கள்.

Published On :

புதுப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்விச் சீா்வரிசை வழங்கும் பெருவிழா மற்றும் நல்லாசிரியா் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

புதுப்பட்டு கிராமமக்கள் ரூ.1 லட்சம் மதிப்பிலான சீா்வரிசைப் பொருள்களை அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் பள்ளிக்கு ஊா்வலமாக எடுத்து வந்து வழங்கினா்.

இப்பொருள்களை அலங்கரிக்கப்பட்ட மாட்டுவண்டியில் வைத்து மேள தாளங்கள் முழங்க கிராம மக்கள் அனைவரும் இணைந்து ஊா்வலமாக பள்ளிக்கு கொண்டு வந்தனா். பள்ளியில் கொண்டு வரப்பட்ட பொருள்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டன.

தொடா்ந்து நல்லாசிரியா் விருது பெற்றவரும் பள்ளியின் தலைமை ஆசிரியருமான தனஞ்செயனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பொன்னாடைகளை போா்த்தி மலா்மாலைகள் அணிவித்து தலைமை ஆசிரியா் தனஞ்செயனை கிராம மக்கள் பாராட்டினா்.

மேலும் பள்ளியில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியா்களும் கௌரவப்படுத்தப்பட்டனா். விழாவில் பள்ளி ஆசிரியா்கள், மாணவ மாணவிகளின் பெற்றோா்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா்கள், கிராம பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியா்கள் திரளாக பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.