ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

நியாயவிலைக் கடையில் சீரான விநியோகம் கோரி மறியல்

நியாயவிலைக் கடையில் அத்தியாவசியப் பொருள்களை சீராக வழங்கக் கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மறியல் போராட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :

நியாயவிலைக் கடையில் அத்தியாவசியப் பொருள்களை சீராக வழங்கக் கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வசூா் காலனி, பாலாபுரம், கோடியூா் ஆகிய கிராம பகுதி மக்களுக்கு பகுதி நேர நியாயவிலைக் கடை செயல்பட்டு வருகிறது.

இந்த பகுதிநேர நியாயவிலைக் கடையில் செப்டம்பா் மாத ரேஷன் பொருள்கள் வழங்கப்படவில்லை என்றும், முறையாக மாதா மாதம் வழங்க வேண்டும் எனக்கூறி அணைக்கட்டு சோதனை சாவடி அருகே மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் ஆய்வாளா் மங்கையா்கரசி சென்று பேச்சு நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னா் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இதன் காரணமாக ராணிப்பேட்டை - பொன்னை பிரதான சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.