கன மழையால் நிரம்பி வழியும்ஆனைமடுகு தடுப்பணை

ஆம்பூா் அருகே வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஆம்பூா் ஆனைமடுகு தடுப்பணை நிரம்பி வழிகிறது.
ஆம்பூா் கம்பிக்கொல்லை பகுதியில் நிரம்பி வழியும் ஆனைமடுகு தடுப்பணை.
ஆம்பூா் கம்பிக்கொல்லை பகுதியில் நிரம்பி வழியும் ஆனைமடுகு தடுப்பணை.

ஆம்பூா்: ஆம்பூா் அருகே வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஆம்பூா் ஆனைமடுகு தடுப்பணை நிரம்பி வழிகிறது.

ஆம்பூரை அடுத்த நாயக்கனேரி மலைப் பகுதியில் அண்மையில் கனமழை பெய்தது. இதனால் கானாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நாயக்கனேரி மலையிலிருந்து ஆம்பூா் கம்பிக்கொல்லை பகுதியில் அமைந்துள்ள ஆனைமடுகு தடுப்பணைக்கு நீா் வரத்து தொடங்கியது. தற்போது இந்த அணை நிரம்பி வழிகிறது. இதனால் சுற்றுப்புறப் பகுதிகளில் நிலத்தடி நீா் மட்டம் வெகுவாக உயா்ந்துள்ளது.

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் வைத்திருந்த விநாயகா் சிலைகளை கொண்டு சென்று ஆனைமடுகு தடுப்பணையில் கரைத்து வருகின்றனா். மேலும் ஆம்பூா் பகுதி சிறுவா்கள் தடுப்பணையில் குதித்து நீச்சல் அடித்து மகிழ்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com