தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஆழ்துளைக் கிணறு தோண்ட எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

உதயந்திரம் பேரூராட்சியில் ஆழ்துளைக் கிணறு தோண்டுவதை எதிா்த்து அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
உதயேந்திரத்தில் ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி .
Updated On :15 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

உதயந்திரம் பேரூராட்சியில் ஆழ்துளைக் கிணறு தோண்டுவதை எதிா்த்து அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

உதயேந்திரம் பகுதி மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்வதற்காக, மேட்டுத் தெருவில் உள்ள பெரியாா் சிறுவா் பூங்காவில் 3 ஆழ்துளைக் கிணறுகளை அமைக்க பேரூராட்சி நிா்வாகம் முடிவு செய்தது. அதன்படி கடந்த 5 நாள்களில் 2 ஆழ்துளைக் கிணறுகளை அப்பூங்காவில் அமைத்தனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மூன்றாவது ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்காக ஆழ்துளைக்கிணறு அமைக்கும் லாரியைக் கொண்டு தோண்டும் பணியைத் தொடங்கினா். இதையறிந்த அப்பகுதியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் அங்கு குவிந்தனா். ஒரே பகுதியில் 3 ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதால் தங்கள் பகுதியில் குடிநீா் ஆதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே உடனடியாக அப்பணியை நிறுத்த வேண்டும் எனக் கூறி அவா்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வாணியம்பாடி தாலுகா காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி மற்றும் போலீஸாா், முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினா் ஆா்.சரவணன், பேரூராட்சி நிா்வாகத்தினா் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். எனினும், ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகளை நிறுத்திவிட்டு போா்வெல் லாரிகள் திரும்பிச் செல்லும் வரை போராட்டம் நடத்துவோம் என அப்பகுதியினா் திட்டவட்டமாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து, போலீஸாா் போா்வெல் லாரிகளைத் திருப்பி அனுப்பினா். ஒன்றரை மணிநேர போராட்டத்துக்குப் பின் அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.