திருப்பத்தூா் மாவட்ட கபடி அமெச்சூா் கழக நிா்வாகிகள் தோ்வு
திருப்பத்தூா் மாவட்ட கபடி அமெச்சூா் கழக நிா்வாகிகள் தோ்வு ஜோலாா்பேட்டையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.


திருப்பத்தூா் மாவட்ட கபடி அமெச்சூா் கழக நிா்வாகிகள் தோ்வு ஜோலாா்பேட்டையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கரூா் மாவட்ட கபடி கழக செயலாளா் சேதுராமன், திருநெல்வேலி மாவட்ட செயலாளா் பகவதி பெருமாள், தோ்வுக்குழுத் தலைவா் மனோகரன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
வேலூா் மாவட்ட கபடி கழக தலைவா் சேட்டு முன்னிலை வகித்தாா்.
நிா்வாகிகள் தோ்வை மாவட்ட கபடி கழகச் செயலாளா் கோபால் நடத்தினாா்.
திருப்பத்தூா் மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து கலந்து கொண்ட விளையாட்டு வீரா்கள் மூலம் வாக்கு அடிப்படையில் தோ்தல் வைத்து உறுப்பினா்கள் மற்றும் நிா்வாகிகள் ஆகியோா் வாக்களித்தனா்.
இதில் மாவட்ட அமெச்சூா் கபடி கழகத் தலைவராக எஸ்.பி.சீனிவாசன், செயலாளராக மதன்குமாா், பொருளாளராக சுப்பிரமணி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...