திருப்பத்தூா் மாவட்டத்தில் டிசம்பா் 29, 30-ஆம் தேதிகளில் தேசிய இளைஞா் விழாவுக்கான தோ்வுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசு இளைஞா் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை மூலம் இளைஞா்களின் தனித் திறமையை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் சுவாமி விவேகானந்தா் பிறந்த நாளான ஜனவரி 12-ஆம் தேதி தேசிய விழாவாகக் கொண்டாடி வருகின்றனா்.
தேசிய இளைஞா் விழாவுக்கான மாவட்ட அளவிலான தோ்வுப் போட்டிகள் மெய்நிகா் முறையில் டிசம்பா் 29, 30-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன. இதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழு உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்படுவா்.
இளைஞா் விழாவுக்கான மாவட்டத் தோ்வுப் போட்டிகளில் மொத்தம் உள்ள 18 போட்டிகளில் தனிநபா் போட்டி பிரிவில் 11 வகையான போட்டிகளும், குழுப் போட்டிப் பிரிவில் 7 வகையான போட்டிகளும், பாரம்பரிய இசை, நடனம், உடை அலங்காரம், நாடகம், காட்சிக் கலைகள், எழுத்தாற்றல், பாரம்பரிய விளையாட்டு ஆகிய போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
தமிழகம் சாா்பில் 15 முதல் 29 வயதுக்கு உள்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்துகொள்ள தகுதியுடையவா்.
மாவட்ட அளவில் வரும் 29, 30-ஆம் தேதிகளிலும், மாநில அளவில் 2021 ஜனவரி 5 முதல் 8-ஆம் தேதி வரையிலும், தேசிய அளவில் ஜனவரி 12 முதல் 19-ஆம் தேதி வரையிலும் போட்டிகள் நடைபெறும்.
போட்டிக்கான விடியோ பதிவை தெளிவான ஒலி/ஒளி அமைப்போடு பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட விடியோ பதிவை உறுதிமொழி படிவத்தோடு இணைத்து திருப்பத்தூா் மாவட்ட விளையாட்டு அலுவலரின் மின்னஞ்சல் முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை அலுவலக நேரங்களில் 0416-2221721 அல்லது 740170 3489, 78240 00270 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.