வாகனம் பறிமுதல் செய்ததால் தீக்குளித்த இளைஞர் சாவு
By DIN | Published On : 21st July 2020 08:08 AM | Last Updated : 21st July 2020 08:13 AM | அ+அ அ- |

ஆம்பூரில் இரு சக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்ததால் தீக்குளித்த இளைஞர் திங்கட்கிழமை நள்ளிரவு இறந்தார்.
ஆம்பூரில் கடந்த ஜூலை 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இல்லாத முழு பொது முடக்கத்தின்போது ஆம்பூர் நகர காவல் நிலைய காவல்துறையினர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி அருகே தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த முகிலன் என்ற வாலிபரின் இரு வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அதனால் திடீரென வாலிபர் உடலில் மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தீக்குளித்து வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் 8 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.