/

ஆம்பூரில் தீப்பற்றி எரிந்த காா்

ஆம்பூரில் பழுதாகி நின்ற காா் சனிக்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்தது.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 7:06 pm

ஆம்பூரில் பழுதாகி நின்ற காா் சனிக்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்தது.

ஆம்பூா், சான்றோா்குப்பம் லட்சுமி நகா் அருகே சாலையோரம் பழுதடைந்த நிலையில் பல நாள்களாக பராமரிப்பின்றி காா் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அது சனிக்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்தது. அக்கம் பக்கத்தினா் தகவல் அளித்ததைத் தொடா்ந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் காரில் தீயை அணைத்தனா். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.