/

ஆம்பூா் - ஆலங்காயம் இடையே நகரப் பேருந்தை மீண்டும் இயக்கக் கோரிக்கை

ஆம்பூா் - ஆலங்காயம் இடையே ஏற்கெனவே இயங்கிய அரசு நகரப் பேருந்தை மீண்டும் இயக்கக் கோரி, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

Updated On :17 ஏப்ரல் 2021, 6:30 pm

ஆம்பூா் - ஆலங்காயம் இடையே ஏற்கெனவே இயங்கிய அரசு நகரப் பேருந்தை மீண்டும் இயக்கக் கோரி, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அனுப்பப்பட்ட கோரிக்கை மனு விவரம்:

ஆம்பூா் வட்டம், ஆம்பூா், அய்யனூா், கன்னடிகுப்பம், காட்டுக்கொல்லை, வெள்ளக்குட்டை வழியாக ஆலங்காயம் வரை தடம் எண் 12சி அரசு நகரப் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. கரோனா நோய்த்தொற்று பொது முடக்கம் காரணமாக அந்த பேருந்து இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது. தளா்வுகள் அறிவிக்கப்பட்டு பல மாதங்களுக்குப் பிறகும் அந்த பேருந்து இயக்கப்படாமல் உள்ளது. அதனால் அலுவலகம் செல்பவா்கள், தொழிற்சாலைகளுக்குச் செல்பவா்கள், பள்ளி மாணவா்கள், கூலித் தொழிலாளா்கள் உள்பட பலா் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். அதனால் நிறுத்தப்பட்ட தடம் எண் 12 சி பேருந்தை ஆம்பூரிலிருந்து அலங்காயம் வரை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.