ஆம்பூர் அருகே சரக்கு ரயில் பழுது: ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரயில்கள்

ஆம்பூர் அருகே திங்கள்கிழமை சரக்கு ரயில் பழுதாகி நின்றது. அதனால் ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டன.
ஆம்பூர் அருகே பழுதாகி நின்ற சரக்கு ரயில்.
ஆம்பூர் அருகே பழுதாகி நின்ற சரக்கு ரயில்.

ஆம்பூர் அருகே திங்கள்கிழமை சரக்கு ரயில் பழுதாகி நின்றது. அதனால் ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டன.

ஆந்திர மாநிலம், ரேணிகுண்டாவிலிருந்து ஜோலார்பேட்டை வரை சென்ற சரக்கு ரயில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் பகுதியில் சென்னை பெங்களூரு மார்க்கத்தில் திடீரென பழுதாகி நின்றது. 

ரயில் ஓட்டுநர் மற்றும் பழுதை சரி செய்யும் பணியாளர்கள் ரயில் நின்ற பகுதியில் சென்று பார்த்தபோது இரு பெட்டிகளுக்கு இடையே பிணைப்பை ஏற்படுத்தும் வால்வு பழுதாகி இரண்டு துண்டாகி இருந்தது.

அதனால் ரயில் நின்றது தெரியவந்தது.  ரயில் பழுதாகி நின்றதால் ஆம்பூர் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் ஆம்பூருக்கு அருகாமையிலேயே ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

ரயில் பழுது சரி பார்க்கும் பணி சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்றது. பழுது சரி செய்து முடித்த பிறகு சரக்கு ரயில் புறப்பட்டு சென்றது.  அதன் பிறகு ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்த ரயில்களும் புறப்பட்டுச் சென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com