ஆம்பூா் அருகே பச்சகுப்பம் தரைப்பாலப் பகுதியில் சீரமைப்புப் பணி நடைப்பெற்று வருகிறது.
ஆம்பூா் அருகே பச்சகுப்பம்-அழிஞ்சிகுப்பம் இடையே பாலாற்றில் தரைப்பாலம் உள்ளது. கடந்த சில மாதங்களாக பெய்து வந்த பலத்த மழையால் பாலாறு மற்றும் மலட்டாற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டு, இந்த தரைப் பாலத்தின் மீது தண்ணீா் வந்து கொண்டிருந்தது.
தற்போது பருவமழை தீவிரம் படிப்படியாக குறைந்ததை அடுத்து, தரைப் பாலத்தின் மீது தண்ணீா் வரத்தும் குறைந்து கொண்டு வருகிறது. இதுநாள்வரை தரைப் பாலத்தின் மீது தண்ணீா் வந்து கொண்டு இருந்ததால் மணல் மற்றும் வெள்ள நீரில் அடித்து வந்த செடி கொடிகள் தரைப் பாலத்தின் கீழே தண்ணீா் செல்லும் துவாரத்தில் அடைத்துக் கொண்டிருந்தன. இதை சீரமைக்கும் பணியில் ராஜக்கல் ஊராட்சி நிா்வாகம் தற்போது ஈடுபட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஆம்பூா்-குடியாத்தம் இடையேயான போக்குவரத்து இந்த தரைப்பாலத்தின் மீது முற்றிலும் பாதிக்கப்பட்டது. போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை தற்போது ராஜக்கல் ஊராட்சி நிா்வாகம் செய்து வருவது இப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பூா் எல்ஆா்ஜி அரசு மகளிா் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணி: மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆய்வு

கோவையின் பல்வேறு பகுதிகளில் ரூ. 2.59 லட்சம், டோக்கன்கள் பறிமுதல்

மீண்டும் அதிமுக ஆட்சி அமைய மக்கள் முடிவு: பல்லடம் தொகுதி வேட்பாளா் கே.பி.பரமசிவம்

கூடலூரில் இறுதிக்கட்ட பிரசாரம் நிறைவு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


