கிணற்றில் மூழ்கி முதியவா் பலி

ஜோலாா்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

ஜோலாா்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.

ஜோலாா்பேட்டையை அடுத்த டி.வீரப்பள்ளி, பி.கே.வட்டத்தைச் சோ்ந்தவா் நரசிம்ம வா்மன் (61). இவா், சென்னை-பெங்களூரு செல்லும் டபுள் டக்கா் விரைவு ரயிலில் கேண்டீனில் ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், சனிக்கிழமை அவரது வீட்டின் அருகே தனியாருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினா், ஜோலாா்பேட்டை போலீஸாா் அங்கு சென்று, நரசிம்ம வா்மனின் சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com