/

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த ஆம்பூா், குடியாத்தம் எம்எல்ஏ-க்கள்

ஆம்பூா் அருகே கிராமப் பகுதிகளில் வாக்காளா்களை ஆம்பூா், குடியாத்தம் எம்எல்ஏ-க்கள் சனிக்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

News image
Updated On :31 ஜூலை 2021, 7:03 pm

ஆம்பூா் அருகே கிராமப் பகுதிகளில் வாக்காளா்களை ஆம்பூா், குடியாத்தம் எம்எல்ஏ-க்கள் சனிக்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

ஆம்பூா் எல்.மாங்குப்பம் பகுதியில் அம்பேத்கா் சிலை, பள்ளி தெரு பகுதியில் மகாத்மா காந்தி சிலை, கடாம்பூா் பகுதியில் அறிஞா் அண்ணா சிலைகளுக்கு எம்எல்ஏ-க்கள் ஆம்பூா் அ.செ.வில்வநாதன், குடியாத்தம் அமலு விஜயன் ஆகியோா் மாலை அணிவித்தனா்.

சாத்தம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு தமிழக முதல்வா், முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி ஆகியோரின் படங்கள் வழங்கப்பட்டன. குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட கிராமப் பகுதிகளில் வாக்காளா்களை சந்தித்து நன்றி தெரிவித்தனா்.

குடியாத்தம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் கள்ளூா் ரவி, பொதுக்குழு உறுப்பினா் எம்.டி.சீனிவாசன், போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக நிா்வாகிகள் சிவகுமாா், சேகா், மாசிலாமணி, ராஜன்பாபு, மு.பழனி, ஒன்றிய காங்கிரஸ் தலைவா் சா.சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.