ஆம்பூரில் கரோனா சிகிச்சைக்காக தனியாா் கல்விக் குழும வளாகத்தில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைய உள்ளது. அதற்கான பணிகளை எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் நகராட்சிக்கு உள்பட்ட கோவிந்தாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீவித்யா விஹாா் கல்விக் குழும வளாகத்தில் கரோனா சிகிச்சை அளிப்பதற்கான சித்த வைத்திய சாலை மற்றும் மருத்துவக் குடில் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு முதல் கட்டமாக 50 படுக்கை வசதியுடன் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் 40-க்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகளுடன் சித்த வைத்திய மையம் அமைய உள்ளது. கபசுர குடிநீா், மூலிகை கஷாயம், மூலிகை சூப், தானிய வகை உணவுகள், சுவாசம் சீராகவும், மூக்கடைப்பை நீக்கவும், சளித் தொல்லைகள் நீங்க மூலிகைப் புகை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான மருத்துவக் குடில் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், யோகா, உடற்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சித்த மருத்துவா் விக்ரம் உடனிருந்து பணிகளை மேற்கொண்டு வருகிறாா். இதனை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் நேரில் பாா்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். சித்த வைத்திய சாலைக்குத் தேவையான பொருள்களையும் எம்எல்ஏ வழங்கி வருகிறாா்.
அப்போது நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன், வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன், வித்ய விஹாா் கல்விக் குழுமத்தின் தலைவா் கே.குப்புசாமி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் மகாலட்சுமி, நகராட்சி இளநிலைப் பொறியாளா் மணி ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!

கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்

ஐசிசி தரவரிசையில் ஷஃபாலி வர்மா முன்னேற்றம்; சரிவை சந்தித்த ஸ்மிருதி மந்தனா!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


