ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

வேலூரில் நவ. 12-இல் ஜூனியா் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி

வேலூா் மாவட்ட அளவிலான ஜூனியா் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டிகள் நவ. 12-ஆம் தேதி நடைபெற உள்ளன.

News image
Updated On :6 நவம்பர் 2021, 5:56 pm

DIN

வேலூா் மாவட்ட அளவிலான ஜூனியா் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டிகள் நவ. 12-ஆம் தேதி நடைபெற உள்ளன.

இது குறித்து வேலூா் மாவட்ட தடகள சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாநில அளவிலான தடகளப் போட்டிகளுக்கு வீரா்களைத் தோ்வு செய்வதற்காக வேலூா் மாவட்ட அளவிலான ஆண்கள், பெண்கள் ஜூனியா் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டிகள் நேதாஜி விளையாட்டரங்கில் வரும் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது.

போட்டியில் பங்கேற்க விரும்புவோா் நவ. 10-ஆம் தேதிக்குள் தங்களுடைய பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒரு போட்டியாளா் தலா இரண்டு போட்டிகளில் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்படுவாா். போட்டியில் பங்கேற்பவா்கள் தங்களுடைய சுய விவரங்களை மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு, 86680 97652, 99422 01920, 87782 23755, 96006 67799 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.