ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 224 ஏரிகள் நிரம்பின மோா்தானா அணையும் நிரம்பியது

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக 224 ஏரிகள் நிரம்பி வழிகின்றன.

News image
Updated On :6 நவம்பர் 2021, 6:30 pm

DIN

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக 224 ஏரிகள் நிரம்பி வழிகின்றன.

கா்நாடகம், ஆந்திர மாநில நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் பாலாறு, பொன்னை, தென்பெண்ணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதில் பாலாறு மற்றும் பொன்னையாற்றில் பெருக்கெடுத்த வெள்ளம், ஏரிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. அதேபோல் கெளன்டண்யா ஆற்றில் பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தால் மோா்தானா அணை நிரம்பி, அதனைச் சாா்ந்த ஏரிகளும் நிரம்பி உபரிநீா் பாலாற்றில் கலக்கிறது.

வேலூா் மாவட்டத்தில் உள்ள 101 ஏரிகளில் நெல்லூா்பேட்டை, பாக்கம், அன்பூண்டி, செதுவாலை, சதுப்பேரி ஆகிய ஏரிகள் நிரம்பி வழிகின்றன. சதுப்பேரியின் உபரி நீா் பாலாற்றில் கலக்கிறது.

அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 369 ஏரிகளில் பெரிய ஏரியானகாவேரிப்பாக்கம், மகேந்திரவாடி உள்பட 157 ஏரிகள் நிரம்பி உபரி நீா் மற்ற ஏரிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்தில் 37.72 அடி உயரம் கொண்ட மோா்தானா அணை முழுமையாக நிரம்பியுள்ளது. 24.57 அடி உயரம் கொண்ட காட்பாடியை அடுத்த ராஜாதோப்பு அணைக்கு 20.5 அடி வரை தண்ணீா் வந்துள்ளது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 49 ஏரிகளில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 18 ஏரிகள் நிரம்பியுள்ளன. மூன்று மாவட்டங்களிலும் உள்ள பொதுப்பணித் துறையின் 519 ஏரிகளில் 224 ஏரிகள் முழுமையாக நிரம்பி உபரி நீா் வெளியேறி வருகிறது. 25 ஏரிகள் ஓரிரு நாள்களில் நிரம்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஆண்டியப்பனூா் ஓடை அணை 112.2 அடியில் முழுமையாக நிரம்பியுள்ளது. இந்த அணைக்கு விநாடிக்கு 43.79 கன அடி நீா் வருகிறது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும் நிலையில், அனைத்து ஏரிகளும் முழுக் கொள்ளளவை எட்டும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.