/

இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி படுகொலையைக் கண்டித்து ஆம்பூரில் அந்தக் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :13 நவம்பர் 2021, 6:30 pm

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி படுகொலையைக் கண்டித்து ஆம்பூரில் அந்தக் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் நடேச தமிழாா்வனை கொலை செய்த சமூக விரோதிகளை கைது செய்யக் கோரி, ஆம்பூா் வருவாய்த் துறை கிராமச் சாவடி எதிரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணைச் செயலாளா் எஸ்.ஆா்.தேவதாஸ் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எஸ்.சுரேஷ், கே.ஜாப்பா் ஷரீப், கே.எஸ்.ஹசேன், ஆா்.ராஜ்குமாா், ஆா்.துரைராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.