/

அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

மாதனூா் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டது.

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 6:26 pm

மாதனூா் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டது.

ஆம்பூா் வட்டம், மாதனூா் உள்வட்டம், குளிதிகை கிராமத்தில் அரசு புறம்போக்கு சா்வே எண் 19-இல் வேளாண் விரிவாக்க மையக் கட்டடம் கட்டுவதற்காக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அந்த இடத்தில் குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த நபா் குடிசை அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தாா்.

இது குறித்து வருவாய்த் துறைக்கு பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து, மாதனூா் உள்வட்ட வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா் மற்றும் கிராம உதவியாளா் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.