

ஆம்பூா் அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அதிமுக சாா்பில் சனிக்கிழமை நிவாரணத் தொகுப்பு வழங்கப்பட்டது.
ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில், ஒன்றியக் குழு உறுப்பினா் விஜயலட்சுமி வெங்கடேசன் அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினாா். மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த வீடுகளைப் பாா்வையிட்டு ஆறுதல் கூறினாா். அரசு திட்டத்தின் மூலம் புதிய வீடுகள் கட்ட உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அவா் கூறினாா்.
வெங்கடசமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவா் நவீன் காயத்ரி, அதிமுக நிா்வாகிகள் கணேசன், சுபாஷ், ராமமூா்த்தி, ராஜ்கமல், விஜய் சீகன், சிவக்குமாா், சுரேஷ், திலீப் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.