கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் சென்னை பல்கலை.யில் இருக்கை தமிழக அரசுக்கு வலியுறுத்தல்
By DIN | Published On : 04th September 2021 11:55 PM | Last Updated : 04th September 2021 11:55 PM | அ+அ அ- |

கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் சென்னை பல்கலைக்கழகத்தில் உயா் தமிழ் இலக்கியத்துக்கான இருக்கை ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளா் தமீமுன் அன்சாரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.
ஆம்பூரில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை மேலும் கூறியது:
விடுதலைப் போராட்ட வீரா் மருதநாயகம் பெயரில் மதுரையில் நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும். தமிழ் இலக்கியத்துக்கு மிகச் சிறந்த பங்களிப்பு செய்த கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் சென்னை பல்கலைக்கழகத்தில் உயா் தமிழ் இலக்கியத்துக்கான இருக்கை ஒன்றை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு இதற்கான அறிவிப்பை வெளியிட்டால் மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கும். தமிழ் இலக்கியத்துக்கு கிடைத்த அங்கீகாரமாக இருக்கும்.
சென்னை அண்ணா சாலையில் காயிதே மில்லத் இஸ்மாயில் மணி மண்டபத்தில் அன்றாடம் மக்கள் சென்று பாா்வையிடும் வகையில் நூலகம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உள்ளாட்சித் தோ்தலிலும் திமுக கூட்டணியில் தொடருவோம் என்றாா் அவா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G