சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சாலையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து

நாட்டறம்பள்ளி அருகே கண்டெய்னா் லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் லாரி ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 6:30 pm

நாட்டறம்பள்ளி அருகே கண்டெய்னா் லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் லாரி ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.

பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி கண்டெய்னா் லாரி சென்று கொண்டிருந்தது.வெள்ளிக்கிழமை மாலை நாட்டறம்பள்ளியை அடுத்த வெலகல்நத்தம் லட்சுமிபுரம் சோதனை சாவடி அருகே வந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னா் லாரி, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சந்திரசேகா் (37) பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.