ஆம்பூர் மலை சாலையில் ஒற்றை யானை: போக்குவரத்து பாதிப்பு

ஆம்பூர் அருகே மலை சாலையில் ஒற்றை யானை குறுக்கே நின்றதால், அவ்வழியாக போக்குவரத்து பாதிப்புக்கப்பட்டது. மலைகிராம மக்கள் அவதியுற்றனர்.
ஆம்பூர் மலை சாலையில் ஒற்றை யானை: போக்குவரத்து பாதிப்பு

ஆம்பூர்: ஆம்பூர் அருகே மலை சாலையில் ஒற்றை யானை குறுக்கே நின்றதால், அவ்வழியாக போக்குவரத்து பாதிப்புக்கப்பட்டது. மலைகிராம மக்கள் அவதியுற்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சிக்குட்பட்ட  பனங்காட்டேரி பகுதிக்கு செல்லும்  மலை சாலையில் இன்று காலை ஒற்றை யானை சாலையில் நின்றது. இதனால் மலைகிராம மக்கள்  பணிக்கு செல்வதற்காக ஆம்பூர் வர முடியாமல் அவதிப்பட்டனர்.

மேலும் வனத்துறையினர் உடனடியாக குழுக்கள் அமைத்து யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும், மலை வனப்பகுதியில் இருந்து கிராம பகுதிக்கு மற்றும் விவசாய நிலங்களுக்குள் யானை வராதவாறு பெரிய பள்ளங்கள் தோன்றி கண்காணிக்க வேண்டும் எனவும் மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com