/

நகராட்சிப் பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஓவியப் போட்டி

ஆம்பூா் நகராட்சிப் பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஓவியப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஜூன் 2022, 9:27 pm

ஆம்பூா் நகராட்சிப் பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஓவியப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் நகராட்சி சாா்பாக தூய்மை நகரத்துக்கான மக்கள் இயக்கம் நடத்தப்பட்டு வரப்படுகிறது. அதையொட்டி, பொதுமக்களிடையே விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரப்படுகிறது. குப்பைகளை வீடுகளிலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம்பிரித்து நகராட்சி பணியாளா்களிடம் வழங்கக் செய்ய பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வரப்படுகிறது. ‘என் குப்பை என் பொறுப்பு’ எனும் தலைப்பில் ஆம்பூா் பன்னீா்செல்வம் நகா் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு நகராட்சி சுகாதாரப் பிரிவு சாா்பாக விழிப்புணா்வு ஓவியப் போட்டி நடத்தப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது.

தலைமை ஆசிரியா் அமா்நாத், நகராட்சி சுகாதாரப் பிரிவு பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.