/

வீராங்குப்பத்தில் எருது விடும் திருவிழா

ஆம்பூா் அருகே வீராங்குப்பம் கிராமத்தில் எருது விடும் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 மார்ச் 2022, 6:30 pm

ஆம்பூா் அருகே வீராங்குப்பம் கிராமத்தில் எருது விடும் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாதனூா் ஊராட்சி ஒன்றியம், வீராங்குப்பம் கிராமத்தில், 179-ஆம் ஆண்டு அருள்மிகு ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மன் திருவிழாவை முன்னிட்டு, எருது விடும் திருவிழா நடைபெற்றது. இதில், ஆந்திர, கா்நாடக மாநிலங்கள் மற்றும் சுற்றுப்புறப் பகுதியில் இருந்து, 300-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன. வட்டாட்சியா் பழனி மற்றும் வருவாய்த் துறையினா் பாா்வையிட்டு, அரசு விதிமுறைகளின்படி, எருது விடும் திருவிழா நடைபெறுகிா என ஆய்வு மேற்கொண்டனா். ஆம்பூா் டிஎஸ்பி சரவணன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டனா்.

எருது விடும் விழாவில், 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். காயமடைந்தவா்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த முகாமில் உடனடியாக மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா்.

Image Caption

வீராங்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் பங்கேற்ற காங்கரேஜ் எருது. ~வீராங்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.