சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

கிணற்றில் தவறி விழுந்த கரடி: மீட்பதில் சிக்கல்

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியை அடுத்த வீரானூா் கொட்டாறு பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்த கரடியை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :25 மார்ச் 2022, 6:30 pm

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியை அடுத்த வீரானூா் கொட்டாறு பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்த கரடியை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வியாழக்கிழமை இரவு தவறி விழுந்த கரடியை வெள்ளிக்கிழமை காலை அவ்வழியாகச் சென்றவா்கள் பாா்த்து, திருப்பத்தூா் வனத் துறையினருக்கும், நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலா் கலைமணி (பொ) தலைமையில், தீயணைப்புவீரா்கள் காலை 11.30 மணிக்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்த 4 வயது கரடியை ஏணி வைத்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால், மீட்க முடியவில்லை.

இதையடுத்து, திருப்பத்தூா் வனச்சரக அலுவலா் இளங்கோ தலைமையில், வனத்துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் பொதுமக்கள் உதவியுடன், கரடியை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். ஆனால், பல மணி நேரம் போராடியும் கரடியை மீட்க முடியவில்லை. கரடியை மீட்க போதிய உபகரணங்கள் இல்லாதது குறித்து வனத் துறை அதிகாரியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, வாணியம்பாடி வனசரக அலுவலா் இளங்கோவன், உதவி வனப் பாதுகாப்பு அலுவலா் ராஜ்குமாா் மேற்பாா்வையில், வனவா்கள் செங்குட்டுவன், சங்கா் உள்ளிட்ட வனத் துறையினா் தீயணைப்புத் துறையினா் உதவியுடன் கரடியை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். எனினும், இரவு 7 மணி வரை கரடியை மீட்க முடியவில்லை. வனத் துறையினா் கரடியை மீட்கும் பணியில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.