சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்: 2 ஏக்கா் நிலம் மீட்பு

நாட்டறம்பள்ளி வட்டத்துக்குள்பட்ட அக்ராகரம், புத்தகரம் பகுதியில் ஏரி ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

Updated On :25 மார்ச் 2022, 6:30 pm

நாட்டறம்பள்ளி வட்டத்துக்குள்பட்ட அக்ராகரம், புத்தகரம் பகுதியில் ஏரி ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

இந்த ஏரியை ஒட்டிய நீா்நிலைப் பகுதிகளில் அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்தனா்.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் புகாா் அளித்த நிலையில், நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் பூங்கொடி தலைமையில், வருவாய் ஆய்வாளா் கௌரி மற்றும் பொதுப் பணி, வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை ஏரி நீா்நிலைப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து பயிரிடப்பட்டிருந்த பருத்தி, துவரை பயிா்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி 2 ஏக்கா் நிலத்தை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.