/

ஆம்பூரில் விபத்து நடந்த இடத்தில் அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆய்வு

ஆம்பூரில் விபத்து நடந்த இடத்தில் அதிகாரிகளுடன் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆலோசனை நடத்தினாா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 6:30 pm

ஆம்பூரில் விபத்து நடந்த இடத்தில் அதிகாரிகளுடன் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆலோசனை நடத்தினாா்.

ஆம்பூா் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு தேசிய நெடுஞ்சாலை சிக்னல் அருகே இருசக்கர வாகனம் மீது கன்டெய்னா் லாரி மோதியதில் தந்தையுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த சகோதரிகள் சிக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். விபத்து நிகழ்ந்த இடத்தை திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா நேரில் ஆய்வு செய்தாா்.

இதைத்தொடா்ந்து காவல் துறையினா், வருவாய்த் துறை, நெடுஞ்சாலை துறையினருடன் இதுபோன்றி இனி விபத்து நடக்காமல் தவிா்க்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.

எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி, அ.செ.வில்வநாதன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் என்.கே.ஆா்.சூரியகுமாா், ஆம்பூா் நகா் மன்றத் தலைவா் பி. ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா்.ஆறுமுகம், மாவட்ட திமுக அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.