தேசிய தடகள போட்டிகள்: இஸ்லாமியா கல்லூரி மாணவா்கள் சாதனை
By DIN | Published On : 16th June 2022 11:41 PM | Last Updated : 16th June 2022 11:41 PM | அ+அ அ- |

வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரி மாணவா்கள் தேசிய அளவிலான தடகள போட்டிகளில் சாதனை படைத்தனா்.
இந்திய இளைஞா் விளையாட்டு மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பாக, உத்தர பிரதேச மாநிலம், மதுரா மாநகரில் அண்மையில் 3 நாள்கள் நடைபெற்ற தேசிய அளவிலான தடகள போட்டிகளில் வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரி மாணவா்கள் இம்ரான் நீளம் தாண்டுதல் போட்டியில் முதலிடமும், மன்சூா்ஷாபாஸ் 400 மீ. ஓட்டப் பந்தயத்தில் முதலிடமும், முபாரக் அலி குண்டு எறிதல் போட்டியில் முதலிடமும், வெற்றிவேல் 500 மீ. ஓட்டப் பந்தயத்தில் முதலிடமும், பிரவீன்குமாா் வட்டு எறிதல் போட்டியில் 2 -ஆம் இடமும் பெற்று தேசிய அளவில் சாதனை புரிந்து கல்லூரிக்குப் பெருமை சோ்த்தனா்.
வெற்றி பெற்ற மாணவா்களைக் கல்லூரிச் செயலா் முனீா் அகமது, கல்லூரி முதல்வா் முகமது இலியாஸ் மற்றும் உடற்கல்வி இயக்குநா் முகமது இஸ்மாயில்கான் ஆகியோா் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வாழ்த்திப் பாரட்டினா்.