3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வாணியம்பாடி அருகே வெளிமாநிலத்துக்கு கடத்தவிருந்த 3 டன் ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.
3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வாணியம்பாடி அருகே வெளிமாநிலத்துக்கு கடத்தவிருந்த 3 டன் ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

வாணியம்பாடி அருகே ஜாப்ராபாத் பகுதியிலிருந்து வெளி மாநிலத்துக்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி பதுக்கி வைத்துள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளா் சதீஷ்குமாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், குற்றப்புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளா் மோகன், காவலா் சதீஷ் ஆகியோா் தலைமையில் போலீஸாா் மற்றும் வட்ட வழங்கல் அலுவலா் சிலம்பரசன் தலைமையில் வருவாய்த் துறையினா் இணைந்து ஜாப்ராபாத் ஊராட்சிப் பகுதியில் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பாலாற்று கரையோரம் முட்புதரில் சுமாா் ஒரு டன் ரேஷன் அரிசி கேட்பாரற்ற நிலையில் இருந்தது. இதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, ஜாப்ராபாத் மசூதி தெருவில் கமால்பாஷா என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனா். அப்போது வீட்டுக்குள் வெளி மாநிலத்துக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த சுமாா் 2 டன் ரேஷன் அரிசி மற்றும் எடை இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் 3 டன் ரேஷன் அரிசியை வாணியம்பாடியில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. இது தொடா்பாக வாணியம்பாடி கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com