சிறப்பு மருத்துவ முகாம்
By DIN | Published On : 21st October 2022 12:00 AM | Last Updated : 21st October 2022 12:00 AM | அ+அ அ- |

ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறைப் பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமை மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் தொடக்கி வைத்தாா். இதில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (ஊரக வளா்ச்சி) ஹரிஹரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அப்துல் கலீல், சந்திரன், ஒன்றிய திமுக துணைச் செயலா் டி.ரவிக்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பரிமளா காா்த்திக், ஆ.காா்த்திக் ஜவஹா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...