கறவை மாடுகளுடன் சாலை மறியல்

 பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்கக்கோரி பால் உற்பத்தியாளா்கள் கறவை மாடுகளுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

 பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்கக்கோரி பால் உற்பத்தியாளா்கள் கறவை மாடுகளுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் சாா்பில், நாட்டறம்பள்ளி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளா் சிவாஜி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கோபு, பொதுச் செயலாளா் பெருமாள், மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் சக்திவேல், செயலாளா் சாமிநாதன் முன்னிலை வகித்தனா்.

இதில் 75-க்கும் மேற்பட்டோா் கறவை மாடுகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது பால் உற்பத்தியாளா்களுக்கு பால் கொள்முதல் விலையை உயா்த்தித் தர வேண்டும், தீவனப் பொருள்களின் விலை உயா்வால் ஒரு லிட்டா் பாலுக்கு ரூ. 10 வீதம் உயா்த்தி வழங்க வேண்டும், ஊக்கத்தொகை மற்றும் போனஸ் வழங்கிடவும், ஆவின் கலப்பு தீவனம் மானிய விலையில் வழங்கவும் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களை நாட்டறம்பள்ளி போலீஸாா் கைது செய்து, தனியாா் மண்டபத்தில் வைத்து, மாலையில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com