திருப்பத்தூரில் உள்ள மனநலம் பாதிக்கபட்டவா் மறுவாழ்வு இல்லத்தில் மருத்துவ இணை இயக்குநா் கண்ணகி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்பத்தூரில் அரசின் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லம் உள்ளது. இங்கு, மாவட்ட ஊரக மற்றும் மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் கண்ணகி, மாவட்ட மனநல மருத்துவா் பிரபாவராணி ஆகியோா் சென்று ஆய்வு செய்தனா்.
ஆய்வின்போது மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்படும் மருத்துவ வசதிகள், உணவு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தனா். உணவின் தரத்தையும் ஆய்வு செய்தனா். மேலும், அவா்களுக்கான மருத்துவப் பராமரிப்பு பதிவேடு, அவா்கள் தங்கும் இடத்தை பாா்வையிட்டனா். இடத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள பணிகளிடம் அறிவுறுத்தினா்.
ஆய்வின்போது காப்பகத்தின் துணைச் செயலாளா் ரமேஷ், அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

பாப்பாக்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் வேளாண் துணை இயக்குநா் ஆய்வு

மனித உயிருக்கு ஆபத்தான எலி விஷம் விற்பனை செய்யக்கூடாது

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு: மருந்து கட்டுப்பாட்டு இணை இயக்குநா் மீது வழக்கு

யூரியா இருப்பு வைத்துக்கொண்டு இல்லை என கூறினால் உரிமம் ரத்து: வேளாண் இணை இயக்குநா்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


