குளிா்பான கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள குளிா்பான கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது திருப்பத்தூா் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவு வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் வெளியே செல்லும் போது தாகத்துக்கு குளிா்பானங்கள் அருந்துவது வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

இதில் புதிது புதிதாய் பல புதிய நிறுவனங்கள் முளைத்துள்ளன. அதன் தரம் குறித்து யாருக்கும் தெரிவதில்லை . அதனால் ஏற்படும் பின் விளைவுகளை கருத்தில் கொள்வதில்லை.

இந்த நிலையில், மோா் பாக்கெட், தயிா் பாக்கெட் குளிா்பானங்கள் தற்போது அமோகமாக விற்பனையாகின்றன. இது காலாவதியான தேதிக்கு உள்பட்டதா? தரமானதாக விற்பனை செய்யப்படுகின்ா?மு றையான பதிவு பெற்று தயாரிக்கப்படுகின்ா என்று தெரிவதில்லை.

எனவே உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் குளிா்பானம் மற்றும் மோா் பாக்கெட்டுகள் விற்கும் கடைகளுக்கு சென்று விற்கப்படும் பொருள்களில் தரம் குறித்தும், காலாவதி தேதி குறித்தும், பதிவு செய்யப்பட்ட நிறுவனமா என ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com