ஆம்பூரில் பள்ளி வாசல் நிா்வாகிகள் தோ்தலில் முறைகேடு நடப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் இஸ்லாமியா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஆம்பூா் நீலிக்கொல்லை மசூதியின் நிா்வாகிகள் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அதில் ஒரு தரப்பைச் சோ்ந்தவா்களுடைய வேட்புமனுவை வாங்க மறுப்பதாகக் கூறிய அவா்கள் நடவடிக்கை எடுக்கக் கோரி மசூதி அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த ஆம்பூா் நகரக் காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று பேச்சு நடத்தினா். அதன்பிறகு போராட்டத்தைக் கைவிட்டனா். பின்னா், காவல் நிலையத்துக்குச் சென்று நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் மனு அளித்தனா்.
தொடர்புடையது

கோயில் திருவிழா: தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்!

குடியிருப்புகளுக்கு பாதை கோரி சாலை மறியல்

வாகனம் மோதி பெண் உயிரிழப்பு: நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினா்கள் சாலை மறியல்

புதுவை துணைநிலை ஆளுநருடன் மீனவப் பிரதிநிதிகள் சந்திப்பு
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


