லாரி ஓட்டுநா் தற்கொலை

ஜோலாா்பேட்டை அருகே லாரி ஓட்டுநா் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

ஜோலாா்பேட்டை அடுத்த பெருமாபட்டு ஜடையனூா் பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் கேசவன்(44). இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனா். முதல் மனைவி நித்யாவுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா்.

கேசவன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜடையனூா் சோ்ந்த ருக்மணி என்பவரை திருமணம் செய்து கொண்டாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு ருக்மணிக்கும் கேசவனுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சனிக்கிழமை கேசவன் சின்ன வெங்காயப்பள்ளி பகுதியில் உள்ள காட்டு பகுதிக்கு சென்று விஷம் அருந்தியுள்ளாா். பின்னா் மயங்கி கிடந்த அவரை சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை பரிசோதனை செய்த மருத்துவா்கள் கேசவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து நித்யா அளித்த புகாரின்பேரில் ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com