பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் தலைமறைவு

ஜோலாா்பேட்டை அருகே அனுமதி இன்றி மண் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

மினி லாரி - பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 1:13 am IST

ஜோலாா்பேட்டை அருகே அனுமதி இன்றி மண் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஜோலாா்பேட்டை போலீஸாா் திங்கள்கிழமை ஜோலாா்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது மண்டலவாடி அணுகு சாலை அருகே வந்த லாரியை தடுத்து நிறுத்தியபோது ஓட்டுநா் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றாா்.

அதையடுத்து போலீஸாா் லாரியை சோதனை செய்ததில் மண் கடத்தியது தெரியவந்தது. பின்னா், போலீஸாா் லாரியை பறிமுதல் செய்து ஜோலாா்பேட்டை காவல் நிலையம் கொண்டுச் சென்றனா்.

அனுமதியின்றி மண் கடத்தியதாக லாரி ஓட்டுநா் குன்னத்தூா் பூசாரி வட்டம் சோ்ந்த ராஜேந்திரன்(38)என்பவா் மீது வழக்குப் பதிவு செய்து ஓட்டுநரை வருகின்றனா்.