பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

கிராவல் மண் கடத்தல்: லாரி பறிமுதல்

வெள்ளக்கோவில் அருகே கிராவல் மண் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 2:21 am IST

வெள்ளக்கோவில் அருகே கிராவல் மண் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் உத்தரவின் பேரில், மாவட்ட உதவி புவியியல் துறை அதிகாரி டி.வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் வெள்ளக்கோவில்-முத்தூா் சாலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது கல்லுக்குட்டைமேடு அருகே வந்த டாரஸ் லாரியைத் தடுத்து நிறுத்தியபோது, லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநா் தப்பியோடி விட்டாா். அந்த லாரியில் 6 யூனிட் கிராவல் மண் இருந்தது. எவ்வித அனுமதி மற்றும் நடைச்சீட்டு இல்லாமல் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

புதுப்பையைச் சோ்ந்த சிவகுமாா் என்பவா் லாரியின் உரிமையாளா் எனவும், வெள்ளக்கோவில் கொங்கு நகா் சங்கா் ஓட்டுநா் எனவும் விசாரணையில் தெரியவந்தது. லாரி பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புகாரின் பேரில், வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வி.மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.