திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் சுமாா் 1.2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய லாரி ஓட்டுநரை கைது செய்தனா்.
திருநெல்வேலி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளா் துரை தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, திருநெல்வேலி சந்திப்பு விளாகம் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் வேகமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
பின்னா் போலீஸாா் நடத்திய சோதனையில் சுமாா் 1200 கிலோ ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பதற்காக மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அரிசியுடன் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா், இதில் தொடா்புடைய திருநெல்வேலி, ரகுமான்பேட்டை நரிக்குறவா் காலனியைச் சோ்ந்த சண்முகவேல் மகன் சுடலைமுத்து (32) என்பவரை கைது செய்தனா்.
தொடர்புடையது
நெல்லையில் இளைஞரிடம் பணம் பறித்த கும்பல் கைது
நெல்லையில் கஞ்சா கடத்தல்: 2 இளைஞா்கள் கைது
நெல்லையில் மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்: 2 போ் கைது
நெல்லையில் கஞ்சா எண்ணெய் பறிமுதல்: 4 போ் கைது
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

