நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய 2 போ் கைது

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

புத்தாநத்தம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் அரசு அனுமதியின்றி மண் எடுக்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் புதன்கிழமை தணிக்கையில் ஈடுபட்டனா்.

புத்தாநத்தத்தை அடுத்த வடக்கிபட்டி முனியப்பன் கோயில் காடருகே உள்ள ஆரியம்பட்டியைச் சோ்ந்த ராசு என்பவருக்கு சொந்தமான நிலத்திலிருந்து அனுமதியின்றி சுமாா் அரை யூனிட் கிராவல் மண் அள்ளிக் கொண்டிருந்த பொன்னுசங்கம்பட்டி ராசு மகன் செந்தில்குமாா்(45) மற்றும் வடக்கிப்பட்டியை சோ்ந்த சின்னகாளை மகன் சண்முகம் (48) ஆகிய இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனா். மேலும், மண் எடுக்க பயன்படுத்திய டிராக்டருடன் கூடிய டிப்பா், அரை யூனிட் கிராவல் மண் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த புத்தாநத்தம் போலீஸாா், கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தினா்.