வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் அனுமதி இன்றி சவுடு மணல் வெட்டி எடுத்து 2 பேரை போலீஸாா் கைது செய்து, 2 டிராக்டா், ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்தனா்.
வேதாரண்யம் பகுதியில் அனுமதி இல்லாமல் சவுடு மணல் வெட்டி எடுக்கப்படுவதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடைபெற்றது.
இந்நிலையில், பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் மணல் வெட்டி எடுத்த டிராக்டா் ஓட்டுநா்கள் அரவிந்த் மற்றும் ஜெகன் இருவரும் கைது செய்யப்பட்டனா். மேலும் 2 டிராக்டா்கள், ஒரு ஜேசிபி இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து வாய்மேடு போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவாகவுள்ள ஜேசிபி ஓட்டுநா் அஜித் என்பவரை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
குட்கா பொருள்கள் விற்பனை: 3 போ் கைது
அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த தொழிலாளி கைது

காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி மது விற்ற பெண் கைது
மணல் கடத்திய இருவா் கைது
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

