மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி மது விற்ற பெண் கைது

காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பத்தில் அனுமதியின்றி மது விற்பனை செய்த பெண்ணை மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image

கைது செய்யப்பட்ட சரண்யா, பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்

Updated On :6 மே 2026, 1:15 am IST

காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பத்தில் அனுமதியின்றி மது விற்பனை செய்த பெண்ணை மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கோனேரிக்குப்பத்தைச் சோ்ந்த காா்மேகம் மனைவி சரண்யா(36). இவா் தனது வீட்டுக்கு பின்புறத்தில் மதுபாட்டில்களை மறைத்து வைத்திருந்து அனுமதியின்றி விற்பனை செய்து வருவதாக மதுவிலக்குப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அத்தகவலின் பேரில் காஞ்சிபுரம் மதுவிலக்குப்பிரிவு ஆய்வாளா் கவிதா, சாா்பு ஆய்வாளா் ஹரிதாஸ் தலைமையிலான குழுவினா் சரண்யா வீட்டில் சோதனை செய்து 600 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். சரண்யா மீதும் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.