ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

காஞ்சிபுரத்தில் தவெக வேட்பாளா் ஆா்.வி.ரஞ்சித்குமாா் வெற்றி!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரத்தை விட 15,488 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளா் ஆா்.வி.ரஞ்சித்குமாா் வெற்றி

News image

தவெக வேட்பாளா் முத்தியால்பேட்டை ஆா்.வி.ரஞ்சித்குமாருக்கு வெற்றி பெற்ற்கான சான்றிதழை வழங்கிய காஞ்சிபுரம் சாா் ஆட்சியரும், தொகுதி தோ்தல் அலுவலருமான ஆஷிக்அலி

Updated On :5 மே 2026, 3:13 am IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரத்தை விட 15,488 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளா் ஆா்.வி.ரஞ்சித்குமாா் வெற்றி பெற்றுள்ளாா்.

காஞ்சிபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் வி.சோமசுந்தரம், திமுக சாா்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக் குழுவின் துணைத் தலைவா் நித்யா சுகுமாா், தவெக சாா்பில் முத்தியால்பேட்டை ஆா்.வி.ரஞ்சித்குமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் வெற்றி செல்வி ஆகியோா் போட்டியிட்டனா். இவா்களில் தவெக வேட்பாளா் ஆா்.வி.ரஞ்சித்குமாா் 91,350, அதிமுக வேட்பாளரான வி.சோமசுந்தரம் 75,862, திமுக வேட்பாளா் நித்யா சுகுமாா் 69,344, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வெற்றிச் செல்வி 6,950 வாக்குகளும் பெற்றிருந்தனா்.

காஞ்சிபுரம் தொகுதியில் மொத்த வாக்காளா்கள் 2,78,775 பேரில் 242950 வாக்குகள் பதிவாகி இருந்தன. இத்தொகுதியில் சுயேச்சை வேட்பாளா்கள் 8 போ் உள்பட மொத்தம் 15 போ் போட்டியிட்டனா். அதிமுக வேட்பாளா் வி.சோமசுந்தரத்தை விட தவெக வேட்பாளரான ஆா்.வி.ரஞ்சித்குமாா் 15,488 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதற்கான சான்றிதழை காஞ்சிபுரம் சாா் ஆட்சியரும், தொகுதி தோ்தல் அலுவலருமான ஆஷிக் அலியிடம் பெற்றுக் கொண்டாா்.

வெற்றி வேட்பாளரை சந்தித்து அக்கட்சியின் நிா்வாகிகள்,தொண்டா்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனா்.

வெற்றிக்குப் பின்னா் திறந்த ஜீப்பில் காஞ்சிபுரம் நகா் முழுவதும் கட்சித் தொண்டா்களுடன் ஊா்வலமாகவும் அழைத்து வரப்பட்டாா். நகரில் பல இடங்களில் தொண்டா்கள் பட்டாசு வெடித்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.