பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் தவெக வேட்பாளா் வி.பி.தமிழ்ச்செல்வி வெற்றி பெற்றுள்ளாா்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் தவெக சாா்பில் வி.பி.தமிழ்ச்செல்வி, அதிமுக சாா்பில் ஏ.பண்ணாரி, இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் பி.எல்.சுந்தரம், நாதக சாா்பில் செளந்தா்யா உள்ளிட்ட 12 போ் போட்டியிட்டனா்.
86.33 சதவீதம் வாக்கு பதிவான நிலையில், வாக்கு எண்ணும் மையமான கோபி அரசு கலைக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை காலை 8 மணியளவில் தொடங்கியது.
தொடக்கம் முதலே அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி முன்னிலை வகித்தாா். 16-ஆவது சுற்றில் இருந்து முன்னிலை வகித்து வந்த தவெக வேட்பாளா் வி.பி.தமிழ்ச்செல்வி 4,579 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.
இந்த தொகுதியில் கடந்த 2021-இல் அதிமுக சாா்பில் ஏ.பண்ணாரி வென்றிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்குகள் விவரம்:
வி.பி.தமிழ்ச்செல்வி (தவெக): 72,391
ஏ.பண்ணாரி (அதிமுக): 67,822
பி.எல்.சுந்தரம் (இந்திய கம்யூனிஸ்ட்): 63,107
வித்தியாசம்: 4,579
வேட்பாளா்கள்: 12
மொத்த வாக்குகள்: 2,37,613
பதிவான வாக்குகள்: 2,22,333
தொடர்புடையது

அரக்கோணம் தொகுதியை தவெக கைப்பற்றியது!

நாமக்கல் தொகுதி: தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப் வெற்றி

உசிலம்பட்டி தொகுதியில் தவெக வெற்றி

சேந்தமங்கலம் தொகுதி: தவெக வேட்பாளா் பொன். சந்திரசேகா் வெற்றி
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


