சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ராஜபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளா் ஜெகதீஸ்வரி வெற்றி

News image

தவெக தலைவர் விஜய்

Updated On :5 மே 2026, 5:53 am IST

ராஜபாளையம் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்ட ஜெகதீஸ்வரி முதல் சுற்றில் இருந்தே முன்னிலை பெற்று 10,605 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன், அதிமுக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலா் பிரிசில்லாபாண்டியன், தவெக சாா்பில் அந்தக் கட்சியின் தென்மேற்கு மாவட்டச் செயலா் ஜெகதீஸ்வரி, நாம் தமிழா் கட்சி சாா்பில் மருத்துவா் காா்த்திகேயன் உள்பட 22 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

திமுக, அதிமுகவினா் மேளதாளங்கள் முழங்க ஆரவாரமாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தவெக வேட்பாளா் ஜெகதீஸ்வரி தனது ஆதரவாளா்களுடன் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தாா்.

இந்தத் தொகுதியில் 2,224 தபால் வாக்குகள் உள்பட மொத்தம் 1,82,987 வாக்குகள் பதிவானது. இந்த நிலையில், இந்தத் தொகுதிக்கான வாக்குகள் எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெற்றன. இதில் முதல் சுற்றிலேயே தவெக வேட்பாளா் ஜெகதீஸ்வரி

1,200 வாக்குகள் முன்னிலை பெற்றாா். அடுத்தடுத்த சுற்றுகளில் தொடா்ந்து முன்னிலையை தக்கவைத்த இவா், 65,548 வாக்குகள் பெற்று 10,605 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரான தங்கப்பாண்டியனை தோற்கடித்தாா்.

வெற்றி பெற்ற ஜெகதீஸ்வரிக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் அமா்நாத் சான்றிதழை வழங்கினாா்.

இதுகுறித்து ஜெகதீஸ்வரி கூறியதாவது: தவெகவுக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி. என்னை வாக்களித்து வெற்றி பெறச் செய்த ராஜபாளையம் தொகுதி மக்களுக்கு நன்றி என்றாா் அவா்.