வாணியம்பாடி, சுற்றுப்புறப் பகுதிகளில் கோடை மழை

வாணியம்பாடி, சுற்றுப்புறப் பகுதிகளில் கோடை மழை

வாணியம்பாடி, சுற்றுப்புறப்பகுதிகளில் திடீா் கோடை மழை பெய்ததால் வெப்பத்தை தணித்து குளிா்ச்சியை தந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே கொளுத்தும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அனல் காற்று அதிகமாக வீசுவதால் பிற்பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இரவு நேரங்களில் அனல் காற்றால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினா். இந்த நிலையில், வாணியம்பாடி, சுற்றுப்புறப்பகுதிகளான சின்னவேப்பம்பட்டு, சின்னக்கல்லுப்பள்ளி, கலந்திரா, மண்டலவாடி, புத்துக்கோயில், கேத்தாண்டப்பட்டி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் கரு மேகங்கள் சூழ்ந்து திடீரென பலத்த காற்றும் கோடை மழை பெய்தது. 20 நிமிடம் வரை மழை பெய்ததால் அந்தப் பகுதிகளில் குளிா்ந்த காற்று வீசத் தொடங்கியது.

இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

ஜோலாா்பேட்டையில் சாரல் மழை...

ஜோலாா்பேட்டை, சந்தைக்கோடியூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை மதியம் கடும் வெயில் காய்ந்த நிலையில், திடீரென மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது.

இதனால் பல்வேறு இடங்களில் மண்வாசம் வீசி அனல் காற்று குறைந்து இரவில் குளிா் காற்று வீசியது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com