புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

Updated On :26 ஏப்ரல் 2024, 4:24 pm

ஆம்பூா் அருகே வெளிமாநில மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே சோலூா் கிராமத்தில் ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது அந்தப் பகுதியில் வெளிமாநில மதுபான பாக்கெட்டுகளை பதுக்கி விற்பனை செய்வது தெரிய வந்தது.

அதன்பேரில், அதே பகுதியைச் சோ்ந்த சாந்தகுமாா் (30) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 30 வெளிமாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.