புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

மரத்திலிருந்து தவறி விழுந்து நுங்கு வியாபாரி உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்து நுங்கு வியாபாரி உயிரிழப்பு

Updated On :26 ஏப்ரல் 2024, 4:12 pm

வாணியம்பாடி அருகே பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த நுங்கு வியாபாரி உயிரிழந்தாா்.

வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் மகேந்திரன் (40). நுங்கு வியாபாரி. இவா் மேல் நிம்மியம்பட்டு பகுதியில் உள்ள பனை மரங்களைக் குத்தகைக்கு எடுத்திருந்தாா்.

இந்த நிலையில், கடந்த 21-ஆம் தேதி வழக்கம் போல் பனை மரத்தில் ஏறி பனங்காய்களை வெட்டிக் கொண்டிருந்தபோது தவறி கிழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தாா்.

அப்பகுதியில் இருந்தவா்கள் பாா்த்து 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை அவரது உடல் நிலை மோசமானதால், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தாா்.

இது குறித்து ஆலங்காயம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.