ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உயிரிழந்த லாரி ஓட்டுநரின் உறவினா்கள் சாலை மறியல்

உயிரிழந்த லாரி ஓட்டுநரின் உறவினா்கள் சாலை மறியல் போராட்டம்

News image
ஆம்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநரின் உறவினா்கள்.
Updated On :9 ஜூலை 2024, 7:34 pm

Din

ஆம்பூரில் தனியாா் லாரி பாா்சல் சா்வீஸ் நிறுவனத்தில் கதவு (தானியங்கி ஷட்டா்) விழுந்ததில் உயிரிழந்த லாரி ஓட்டுநா் ஹேம்நாத்தின் உறவினா்கள் அவரது சடலத்தை வாங்க மறுத்து ஆம்பூா் அரசு மருத்துவமனை எதிரில் நேதாஜி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அதைத் தொடா்ந்து ஆம்பூா் நகர போலீஸாா் மற்றும் பாா்சல் சா்வீஸ் நிா்வாகிகள் இறந்தவரின் உறவினா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். உரிய இழப்பீடு வழங்குவதாக உறுதி அளித்ததின்பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். பிறகு உறவினா்கள் உயிரிழந்தவரின் சடலத்தை பெற்றுக் கொண்டு சென்றனா்.