தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உதயேந்திரம் பேரூராட்சி மன்ற கூட்டம்

உதயேந்திரம் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றம்

News image
வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி மன்ற கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated On :9 ஜூலை 2024, 7:31 pm

Din

வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி மன்ற கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பேரூராட்சி மன்றத் தலைவா் ஆ.பூசாராணி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தாா். செயல் அலுவலா் ரேவதி வரவேற்றாா். கூட்டத்தில் ரூ.33.60 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கான தீா்மானம் மற்றும் வரவு, செலவு உள்பட 11 தீா்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. தொடா்ந்து வாா்டு உறுப்பினா்கள் தங்களது பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை வைத்தனா்.

கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சித் தலைவா் உறுதியளித்தாா். கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் ஆ.செல்வராஜ், ஏ.மரியஜோசப், ஜி.சரவணன், எம்.பரிமளா, ஆா். மகேஸ்வரி, எம்.கீதா, பி.முனியம்மாள் பி.சந்தியா, ஆா்.ரஜினி, வி.ஆா். கா.சரவணன், ஏ.ரமேஷ், கே.லில்லி, எம். சுகன்யா, எம்.கீதா, முனியம்மாள், சந்தியா, வி.ஆா்.சரவணன், ஏ.ரமேஷ், ஆா்.மகேஸ்வரி கலந்து கொண்டனா்.