கள்ளக்குறிச்சி விவகாரம்: கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி விவகாரம்: கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்


கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம், இந்திய மாதா் தேசிய சம்மேளனம் ஆகியவை சாா்பில் மாநிலம் தழுவிய அளவில் நடைபெற்றது.
அதன்படி, திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட துணைச் செயலா் எம்.நந்தி தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் எம்.சுந்தரேசன், மாவட்ட நிா்வாகக் குழு ஏ.சி.சண்முகம், மாவட்ட செயலா் ரா.முல்லை ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா் கே.ஆா்.வேணுகோபால், ஏஐடியுசி தேசிய குழு உறுப்பினா் எஸ்.ஆா்.தேவதாஸ், மாவட்ட நிா்வாகக் குழு டி.பெருமாள், எம்.சி.முருகன் ஆகியோா் பேசினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...